Home நாடு அமரர் சீனி நைனா முகமது: மலேசியத் தமிழுலகம் மறவாத தமிழறிஞரின் நினைவுகள்!

அமரர் சீனி நைனா முகமது: மலேசியத் தமிழுலகம் மறவாத தமிழறிஞரின் நினைவுகள்!

410
0
SHARE
Ad

மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தன் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றவர் அமரர் கவிஞர் சீனி நைனா முகமது. அவர் மறைந்து பத்தாண்டுகள் கடந்து விட்டன. நேற்று ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்னாரின் நினைவு நாள்.எண்ணற்றப் படைப்புகளை வழங்கி மலேசியத் தமிழ் இலக்கியக் களத்தை செழுமைப்படுத்தியவர். தான் கற்ற கவிதையை, அதன் இலக்கண வடிவங்களை எத்தனையோ ஆர்வலர்களுக்கு நாடு முழுவதும் சுற்றித் திரிந்து கற்றுக் கொடுத்தவர். அதன் மூலம் பல கவிஞர்களை தன் வாரிசாக உருவாக்கியவர்.

அவர் மறைந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரிடம் இலக்கணப் பாடம் படித்தவர்கள், அவரின் கவிதை ஆற்றலில் கொஞ்சம் அவரிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள் என பலரும் இன்னும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அவரின் நினைவாக சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் (உப்சி – UPSI) நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி நடத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை ஜூலை 27-ஆம் தேதி டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.

அமரர் சீனி நைனா முகமது அவர்களின் இலக்கியப் படைப்புகள், உலகத் தமிழர்களிடையே நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற நன்னோக்கில், சீனி ஐயாவுடன் நெருங்கிப் பழகிய மலேசியக் கணிஞர் முத்து நெடுமாறன் அன்னாரின் எழுத்தோவியங்களை ‘நல்லாற்கினியர் நற்பதிவுகள்’ என்ற தலைப்பில் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். செல்லியல் ஊடகமும், முத்து நெடுமாறனின் முரசு சிஸ்டம் நிறுவனமும் இணைந்து இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

சீனி நைனா முகமதுவின் படைப்புகளை கீழ்க்காணும் இணைப்பில் வாசகர்கள் படித்து மகிழலாம்:

https://kural.anjal.net