Home நாடு சீனி நைனா முகம்மது மறைவு! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

சீனி நைனா முகம்மது மறைவு! பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

687
0
SHARE
Ad

பினாங்கு, ஆகஸ்ட் 8 – இன்று காலை நடைபெற்ற புகழ் பெற்ற மலேசியக் கவிஞரும், தமிழறிஞருமான சீனி நைனா முகம்மது அவர்களின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களின் இறுதி மரியாதைகளை செலுத்தினர்.

கலந்து கொண்ட முக்கியமானவர்களில் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, விளையாட்டுத் துறை துணையமைச்சரும் மஇகா உதவித் தலைவருமான டத்தோ எம்.சரவணன், பினாங்கு காவல் துறை தலைவர் டத்தோ தெய்வீகன், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் மூத்த தலைவர் முகமட் இட்ரிஸ் ஆகியோரும் அடங்குவர்.

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி நேற்றிரவு சீனி நைனா முகம்மதுவின் நல்லுடலுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

#TamilSchoolmychoice

மேலும், சீனி நைனா முகம்மதுவின் எழுத்தாள நண்பர்களும், உறவினர்களும் அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

சீனி நைனா முகம்மது அவர்களிடம் பாடம் கற்ற பல மாணவர்கள் கண்ணீருடன் அவருக்கு பிரியாவிடை தந்ததிலிருந்து, எந்த அளவுக்கு அவர் மீது அவரது மாணவர்கள் பாசமும், குரு பக்தியும் கொண்டிருந்தார்கள் என்பதையும், எந்த அளவுக்கு அவரது இழப்பை எண்ணி வருந்துகின்றார்கள் என்பதையும் உணர்த்துவதாக இருந்தது.

மலேசியத் தமிழ் உலகிற்கு தனது படைப்பாற்றலாலும், பங்களிப்பாலும் ஈடு செய்யமுடியாக அளவிற்கு பன்முனைகளிலும் இலக்கிய சேவையாற்றிய சீனி நைனா முகம்மது நேற்று காலமானார்.

அவரது மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் என்றுமே நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை உருவாக்கி விட்டிருக்கின்றது.

அன்னாரின் இறுதிச் சடங்கில் எடுக்கப்பட்ட சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:-

சீனி நைனா 1

(இறுதிச்சடங்கில் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, டத்தோ எம்.சரவணன், டத்தோ தஸ்லிம் முகமட் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்)

சீனி நைனா 2

(சீனி நைனா முகம்மது அவர்களின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது)

cheni