Home இந்தியா பாம்புடன் உணவு உண்டு, படுத்து தூங்கும் சிறுமி! காணொளியுடன்!

பாம்புடன் உணவு உண்டு, படுத்து தூங்கும் சிறுமி! காணொளியுடன்!

1053
0
SHARE
Ad

snake_girl_004உத்திரபிரதேசம், ஆகஸ்ட் 8 – இந்தியாவில் சிறுமி ஒருவர் பாம்புடன், பயப்படாமல் விளையாடி மகிழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

snake_girl_002இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கஜோல் கான் (11) என்ற சிறுமி விஷம் வாய்ந்த பாம்புடன் உணவு உண்டு, ஒரே படுக்கையில் படுத்து வாழ்ந்து வருகிறார்.

snake_girl_003மேலும் இவர் பல முறை பாம்பிடம் கடி வாங்கியுள்ளார். இவரது தந்தை பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு இதில் ஆர்வம் வந்துள்ளது. இவரது தந்தை தற்போது இவரின் அண்ணணுக்கு இந்த தொழிலை கற்றுக் கொடுத்துவிட்டு ஒய்வு எடுத்து வருகிறார்.

#TamilSchoolmychoice

snake_girl_006இதனை அடுத்து தற்போது கஜோலும் குடும்ப தொழிலில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடதக்கது. பாம்புடன் இவர் நட்புடன் பழக ஆரம்பித்த நாளிலிருந்து, கால், கை, வயிறு, கண்ணம் என பல்வேறு இடங்களில் கடிவாங்கியிருந்தாலும், இவருக்கு பாம்பு மீது அன்பு அதிகரித்துள்ளது.

snake_girl_007இதுகுறித்து கஜோல் கூறுகையில், “எனக்கு பாம்புடன் விளையாடுவது தான் பிடித்துள்ளது என்றும், என்னை கடித்தால் எனது தந்தை காயத்திற்கு மருந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.