Home தொழில் நுட்பம் இணைய பாதுகாப்பு நிறுவனமான பிரைவேட்கோரை வாங்கியது பேஸ்புக்!

இணைய பாதுகாப்பு நிறுவனமான பிரைவேட்கோரை வாங்கியது பேஸ்புக்!

563
0
SHARE
Ad

facebookநியூயார்க், ஆகஸ்ட் 8 –  முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக் இணைய பாதுகாப்பு நிறுவனமான ‘பிரைவேட்கோர்’ (PrivateCore) நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உளவு அமைப்பால் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி அமெரிக்க உளவு அமைப்பு, பேஸ்புக்கின் சர்வர்களை ஊடுருவியதாகவும், அதன் மூலம் எண்ணற்ற பயனர்களின் தகவல்கள் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தங்கள் சர்வர்களை பாதுகாக்கவும், தகவல் திருட்டுகள் நடைபெறாமல் இருக்கவும், சிறந்த இணையப் பாதுகாப்பை வழங்கும் பிரைவேட்கோர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இரு நிறுவனங்களுக்கு இடையேயான வர்த்தகம் பற்றி முழுவதுமாக வெளியிடப்படவில்லை என்றாலும், பேஸ்புக்,  பிரைவேட்கோர் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை, தங்கள் சர்வர்களில் பயன்படுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது பற்றி பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், “பிரைவேட்கோர் நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் இணையம் வழியே ஊடுருவும் மால்வேர் மற்றும் அனுமதிக்கப்படாத கருவிகளின் ஊடுருவல் ஆகியவற்றை தடுக்கும்” என்று கூறியுள்ளார்.

பிரைவேட்கோர் நிறுவனமும் பேஸ்புக் உடனான இந்த இணைப்பை உறுதி செய்துள்ளது.