சிங்கப்பூர், ஆகஸ்ட் 8 – சிங்கப்பூரின் செந்தோசா தீவில் நேற்று நடைபெற்ற உலக சுறா மீன்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் உலக புகழ் பெற்ற சுறா மீன்களின் ஆர்வலரான கிரிடினா ஜெனடோ கலந்து கொண்டார்.
சுறா மீன்களை பாதுகாக்கும் பொருட்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார். உலகில் சுறா மீன்களின் துடுப்புகளை விரும்பி உண்பவர்கள் சிங்கை மக்கள் என்பதால் “I’m FINished with FINS” எனும் கருப்பொருளுடன் இப்பிரச்சாரம் நடத்தபட்டது.
(சுறா மீன்களின் ஆர்வலர் கிரிடினா ஜெனடோ சுறா மீன்களை பார்வையிடுகிறார்)
(ஊழியர்கள் தங்கள் கையாலேயே சுறாக்களுக்கு உணவளித்தனர்.)
(ஒரு சுறா, தன் வாயில் மீனை கவ்விக் கொண்டு செல்லும் காட்சி)
(ஹேமர் சார்க் என்ற ஒரு வகையான சுறாவிற்கு (Hammer Shark) உணவு அளிக்கும் காட்சி)
(பார்வையாளர்களுக்கு மிக அருகே சுறா நீந்திச் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்)