Home தொழில் நுட்பம் சீனாவில் காகோடாக், லைன் செயலிகளுக்குத் தடை!

சீனாவில் காகோடாக், லைன் செயலிகளுக்குத் தடை!

449
0
SHARE
Ad

kakao_logoபெய்ஜிங், ஆகஸ்ட் 8 – சீனாவில் குறுந்தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் ‘காகோடாக்’ (KakaoTalk) மற்றும் ‘லைன்’ (Line) செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அரசு, தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் செயலிகள் மூலம் தங்கள் நாட்டின் இரகசியங்களை அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் உளவு பார்ப்பதாக  தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

அதன் காரணமாக அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பல்வேறு தடைகளை விதித்தது. தற்போது குறுந்தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் செயலிகளையும் தடை செய்துள்ளது.

#TamilSchoolmychoice

k1இது குறித்து சீன அரசுத் துறை வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், “குறுந்தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் தென்கொரியாவின்  காகோடாக் மற்றும் ஜப்பானின் லைன் செயலிகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதப்படுகின்றது.அதனால் அந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

இந்த தடையை தென்கொரிய தொழிநுட்ப அமைப்பும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து சியோலில் உள்ள இணையதளக் கட்டுப்பாட்டு இயக்குநர் லீ ஜின்-ஜியூ கூறியதாவது:-

videoLlamadas“சீனாவுக்கு எதிராக சதித் திட்டங்களைத் தீட்ட குறுந்தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் இந்த செயலிகளை பயன்படுத்துவதாக சீனா கருதுகின்றது.

அதன் காரணமாக இந்த செயலிகளின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் அவர், இந்த தடையை நீக்குவது குறித்து, சீன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.