வாஷிங்டன், ஆகஸ்ட் 8 – வாஷிங்டன் வெளியுறவு துறையில் நேற்று முன்தினம் ஒபாமா தலைமையில், ஆப்பிரக்க தலைவர்களுடனான மாநாடு நடைப்பெற்றது. இதில் ஆப்ரிக்கா நாட்டின் 50 மாநில தலைவர்களும் கலந்துக்கொண்டார்கள்.
(மாநாட்டில் ஒபாமா உரையாற்றும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்)
ஆப்ரிக்காவில், உணவு பாதுகாப்பு, சிவில் உரிமைகள், பெண்கள் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி உட்பட பல்வேறு பிரச்சனைகளை களைவதற்கான தீர்வுகளை கண்டறிய இந்த மாநாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.