Home உலகம் நவம்பர் 26-ல் சார்க் நாடுகளின் மாநாடு!

நவம்பர் 26-ல் சார்க் நாடுகளின் மாநாடு!

715
0
SHARE
Ad

medium_13601காத்மாண்டு, ஆகஸ்ட் 8 – சார்க் நாடுகள் பங்கேற்கும் 18-வது மாநாடு, வரும் நவம்பர் மாதம் 26-ம் தேதி நேபாளத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக உதவி செய்தித் தொடர்பாளர் பாரத் ராஜ் ரெக்மி கூறுகையில், “சார்க் நாடுகள் பங்கேற்கும் 18-வது மாநாடு, வரும் நவம்பர் மாதம் 26-ம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெறும்.

SAARC-logoஇது தொடர்பாக சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த பல்வேறு உயர் நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுளார்.

#TamilSchoolmychoice

சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 2002-ம் ஆண்டும் சார்க் மாநாடு நேபாளத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.