கோலாலம்பூர்: அனைவருக்கும் இது நெருக்கடியான நேரம் என்பதையும், பலர் சம்பாதிப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும் காவல் துறை அறிந்திருக்கிறது.
சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், சாலையோரங்களில் வணிகத்தில் ஈடுபடுவது போன்ற குற்றங்களைச் செய்தவர்களுக்கு காவல் துறை ஆரம்ப ஆலோசனைகளை வழங்கும் என்று செர்டாங் காவல் துறைத் தலைவர் ரசாலி அபு சமா கூறினார்.
இருப்பினும், அறிவுறுத்தப்பட்ட பின்னர் குற்றம் மீண்டும் செய்யப்பட்டால், அது அதிகாரிகளுக்கு சவால் விடுவது போல் அர்த்தமாகும் என்று அவர் கூறினார்.
சாலையோர வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர காவல் துறையின் நடவடிக்கை குறித்து ரசாலி இதைக் கூறினார். இது சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் கூறினார்.
“இது வணிகர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் அறிவுறுத்துவதற்கான விழிப்புணர்வின் ஒரு கட்டமாகும். காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காது. இருப்பினும், இந்த சூழ்நிலையில் அக்கறை கொண்டு, காவல் துறை அவர்களுக்கு இந்த நடவடிக்கையை மீண்டும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது. வணிக உரிமம் பெற உள்ளூர் ஊராட்சி மன்றங்களுக்கு செல்லுங்கள். அவர்கள் அதை மீண்டும் செய்தால், சவால் விடுவது போல தெரிகிறது. காவல்துறை மற்றும் அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.