பெங்களூர் – ஃபேஸ்புக்கில் உள்ள முக்கிய குறைபாட்டை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்பவருக்கு ரூ.15 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் ‘லாக் இன்’ செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.
ஃபேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட வாய்ப்புள்ளது.
ஃபேஸ்புக்கில் உள்ள இந்த முக்கிய குறையை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், பொதுவாக ஃபேஸ்புக்கில் கடவுச்சொல் [Password] மறந்துவிட்டால், கடவுச்சொல்லை மறுபதிவு [Reset] செய்ய தொலைபேசி எண் அல்லது இமெயில் கேட்கும்.
இதற்கு 6 இலக்க எண்ணை ஃபேஸ்புக் நிறுவனம் அனுப்பும். அதன் மூலமே மறுபதிவு செய்ய முடியும். அவ்வாறு செய்யும்ப்போது 10-12 முறை தவறாக பதிவிட்டால் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுவிடும். ஆனால், ஆனந்த் பிரகாஷ் வேறொரு முறையையும் கண்டுபிடித்துள்ளார்.
இந்த எளிமையான முறை மூலம் தங்களது கடவுச்சொல்லை எளிதாக மறுபதிவு செய்து கொள்ளலாம். இதனையடுத்து ஃபேஸ்புக்கில் இருந்த குறையை சரி செய்யப்பட்டது. மேலும் ஃபேஸ்புக் குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு ஃபேஸ்புக் நிறுவனம் 15000 அமெரிக்க டாலர் பரிடு அறிவித்துள்ளது.