Home Featured கலையுலகம் கின்னஸ் சாதனை படைத்தார் இந்தி நடிகை சோனாஷி சின்ஹா!

கின்னஸ் சாதனை படைத்தார் இந்தி நடிகை சோனாஷி சின்ஹா!

657
0
SHARE
Ad

sonakshi-sinhaமும்பை – கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் மற்றும் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா, பிரபு தேவா இயக்கிய ரவுடி ரதோர் (2012), டபாங் 2 (2012), துப்பாக்கி படத்தின் ரீமேக்கான ஹாலிடே (2014) போன்ற மெகா ஹிட் ஹிந்தி படங்களிலும், தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்திலும் நடித்தற்காக நன்கு அறியபடுபவர்.

சமீப காலமாக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் அடிக்கடி இவரைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் தனது பாடல் ஒன்றினை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த சோனாக்ஷி, தற்போது கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரினை இடம் பெறச் செய்துள்ளார்.

அனைத்துலக பெண்கள் தினம் நேற்று முன்தினம் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மும்பையில் ஒரே நேரத்தில் பல பெண்கள் சேர்ந்து ‘நெயில் பாலிஷ்’ (விரல்நகப் பூச்சு) போடும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் சோனாக்ஷியும் கலந்து கொண்டு, கின்னஸ் சாதனை படைத்த பெண்மணியாக மாறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“சிறு வயதிலிருந்தே கின்னஸ் புத்தகத்தில் என் பெயரை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன், இன்று அந்த ஆசை நிறைவேறிவிட்டது, அதுவும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் நாளில், இந்த நாள் நிச்சயம் என் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக இருக்கும்” என சோனாக்ஷி கூறினார்.

சோனாக்ஷி சின்ஹா தற்போது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அகிரா படத்தில் நடித்து வருகிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சோனாக்‌ஷி தனது சந்தோஷ தருணத்தை டிவிட்டரில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.