Home கலை உலகம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது ரஜினி அறிவுரை – சோனாக்ஷி

என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது ரஜினி அறிவுரை – சோனாக்ஷி

595
0
SHARE
Ad

sonakshi-sinha-postபுதுடெல்லி, நவம்பர் 15 – ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள் அவரைப் பற்றி, அவருடன் நடித்த அனுபவங்கள் குறித்து பல தகவல்களை கூறுவார்கள். அதேபோல் ரஜினியின் புதிய ஜோடியான சோனாக்ஷி சின்ஹா ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “முன்னனி கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். ஆனாலும் எனக்கு குருவாக இருப்பது ரஜினிதான். அவருடன் ‘லிங்கா’ படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது”.

“நிறைய கதாநாயகர்களுடன் நடித்தபோதெல்லாம் கிடைக்காத அனுபவம் லிங்காவில் ரஜினியுடன் நடித்தபோது கிடைத்தது. ரஜினி நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். உடம்பை கோவில் மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை சொன்னார்”.

#TamilSchoolmychoice

“அவர் ஒரு பல்கலைக்கழகம் மாதிரிதான் எனக்குத் தெரிந்தார். எளிமையாகவும் அன்பாகவும் பழகினார். அவரிடம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது”.

“படப்பிடிப்பில் கேமரா முன்னால் இருக்கும் ரஜினி, கேமரா பின்னால் இருக்கும் ரஜினி என இரு வேறு ரஜினியை பார்த்தேன். எனக்கு கேமரா பின்னால் இருந்த ரஜினியை ரொம்பப் பிடித்தது. அவர் கூறிய பல விஷயங்கள் என் வாழ்கையையே மாற்றியது” என கூறியுள்ளார் சோனாக்ஷி.