Home இந்தியா 5 தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து – பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்!

5 தமிழக மீனவர்கள் தூக்கு ரத்து – பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்!

595
0
SHARE
Ad

11-wilsonசென்னை, நவம்பர் 15 – மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியானதை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இலங்கை கடற்படையால் கடந்த 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு போடப்பட்டது. இதனால் 3 ஆண்டுகாலம் அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கில் கொழும்பு உயர்நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

bjpதமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டியது. இது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. இது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

bjp-இந்த மகிழ்ச்சியை தமிழக பாஜகவினரும் கொண்டாடினர். பாஜக தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும் லட்டுகளை வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.