Home கலை உலகம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க கூடாது – சோனாக்ஷி சின்ஹா!

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்க கூடாது – சோனாக்ஷி சின்ஹா!

519
0
SHARE
Ad

sonakshi-launches-smile-on-wheels-15புதுடெல்லி, ஜூன் 13 – ஜல்லிக்கட்டு தடையை நீக்க கூடாது என்று இந்தி நடிகை சோனாஷி சின்ஹா வற்புறுத்தி உள்ளார். இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்தார்.

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது, ஜல்லிக்கட்டு பற்றி எதிரான கருத்து கூறி ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

#TamilSchoolmychoice

மத்திய அரசுக்கும் கோரிக்கைகள் விடப்படுகிறது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்து அரசிதழில் ஆணை வெளியிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு சோனாஷி சின்ஹா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில்; “ஜல்லிக்கட்டுக்கான தடையை நீட்டிக்க வேண்டும்”.

“ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடிக்கும்படி என்னுடைய ரசிகர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். காளைகளை காப்பாற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் சோனாஷி.