Home வணிகம்/தொழில் நுட்பம் இன்போசிஸ், டி.சி.எஸ். நிறுவனங்கள் விசா விதிமீறல்: அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணை!

இன்போசிஸ், டி.சி.எஸ். நிறுவனங்கள் விசா விதிமீறல்: அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணை!

731
0
SHARE
Ad

tcs_logo_நியுயார்க், ஜூன் 13 – இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்களின் விசா விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பாக, அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணையைத் துவக்கியுள்ளது.

மேற்கண்ட நிறுவனங்கள், அமெரிக்காவின் சதர்ன் கலிபோர்னியா எடிசன் என்ற மின் நிறுவனத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து தருகின்றன.

இதற்காக, அவை தொழில்நுட்ப வல்லுனருக்கான ‘எச்.1பி’ எனப்படும், தற்காலிக விசாவை பயன்படுத்தி, சாதாரண ஊழியர்களை எடிசன் நிறுவன அழைப்பின் பேரில் அமெரிக்காவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதையடுத்து, எடிசன் நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட தன் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து விட்டு குறைந்த ஊதியத்தில் இந்தியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.

அவர்களுக்கு, தொழில்நுட்பத்தை சொல்லித் தருமாறு தன் பணியாளர்களை எடிசன் நிறுவனம் நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால், உள்நாட்டினரின் வேலைவாய்ப்பு பறி போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை துவங்கியுள்ளது.

இதே போல், ஆர்லண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டு நிறுவனம், 250 அமெரிக்க பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து விட்டு, அவர்களுக்கு பதிலாக ‘எச்.1பி’ விசா மூலம் இந்தியர்களை பணிக்கு அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், கட்டாய விடுப்பு வழங்கினாலும் நிறுவனத்தின் பல பிரிவுகளில் அதிகமானோரை பணிக்கு சேர்த்துள்ளதாக வால்ட் டிஸ்னி வேர்ல்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.