Home Featured வணிகம் டாட்டா அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவராக தமிழர் சந்திரசேகரன் நியமனம்!

டாட்டா அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவராக தமிழர் சந்திரசேகரன் நியமனம்!

1034
0
SHARE
Ad

chandrasekaran-tata sons

புதுடில்லி – இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனங்களுள் ஒன்று டாட்டா நிறுவனம். நாட்டின் பழமையான – வலுவான – உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழரான என்.சந்திரசேகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டாட்டாவின் இயக்குநர்கள் ஐவர் கொண்ட குழு இந்த நியமனத்தைச் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் டாட்டாவின் தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்ரிக்கும், முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் சைரஸ் மிஸ்ரி தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

அவருக்குப் பதிலாக தற்போது சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது டாட்டா கொன்சல்டன்சி செர்விசஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்.