Home Featured நாடு சரவாக்கின் அடுத்த முதல்வர் அபாங் ஜொஹாரியாக இருக்கலாம்!

சரவாக்கின் அடுத்த முதல்வர் அபாங் ஜொஹாரியாக இருக்கலாம்!

778
0
SHARE
Ad

Datuk Amar Abang Johari Tun Openg

கூச்சிங் – சரவாக் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா கட்சியின் துணைத் தலைவர் டத்தோ அபாங் ஜொஹாரி துன் ஓபெங் (படம்) தேர்ந்தெடுக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

மறைந்த சரவாக் முதல்வர் அட்னான் சாத்திம் பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா கட்சியின் தலைவராகவும் இருந்தார். அந்தக் கட்சியின் துணைத் தலைவராக பதவி வகிக்கும் அபாங் ஜெஹாரி இரண்டாவது துணை முதல்வராகப் பணியாற்றி வந்தார்.

#TamilSchoolmychoice

மற்ற சில சரவாக் தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும், தற்போதைக்கு முன்னணியில் இருக்கும் பெயர் அபாங் ஜொஹாரிதான்.

ஆளும் தேசிய முன்னணிக் கூட்டணியின் ஓர் அங்கமாகத் திகழும் பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் அபாங் ஜொஹாரி பொறுப்பேற்கவுள்ளார்.

அட்னானின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற மாநில அரசாங்க நிகழ்ச்சிகளிலும், பத்திரிக்கையாளர் சந்திப்புகளிலும் அபாங் ஜொஹாரிதான் முன்னிலை வகித்து, உரையாற்றினார் என்பது, அவர்தான் அடுத்த முதல்வராக வருவார் என்பதற்கான மற்றொரு அறிகுறி என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.