Home உலகம் நரேந்திர மோடி ஒரு செயல்வீரர் – அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு!

நரேந்திர மோடி ஒரு செயல்வீரர் – அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு!

479
0
SHARE
Ad

Modi Obamaமியான்மர், நவம்பர் 15 – பிரதமர் நரேந்திர மோடி ஒரு செயல்வீரர் என அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளார். மியான்மர் தலைநகர் நேபிடாவில் ஆசியான் மற்றும் தெற்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்களுக்கு அந்நாட்டு அதிபர் பீம்சிங் விருது அளித்தார்.

இதில் மியான்மரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்து பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார்.

அப்போது மோடியை ஒரு செயல் வீரர் என்று பாராட்டியதாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இரு தலைவர்களும் கடந்த 6 வாரங்களில் சந்திப்பது 2வது முறையகும். செப்டம்பர் 20ல் வெள்ளைமாளிகையில் அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.