Home வணிகம்/தொழில் நுட்பம் 2020-ல் வர்த்தகத்திற்கு வரும் ஹோண்டா ஜெட் விமானங்கள்! 

2020-ல் வர்த்தகத்திற்கு வரும் ஹோண்டா ஜெட் விமானங்கள்! 

605
0
SHARE
Ad

hondajetடோக்கியோ, நவம்பர் 15 – ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம், தனது தயாரிப்பில் இருக்கும் சிறிய ரக வர்த்தக ஜெட் விமானங்களை, 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது வெளியிடலாம் என்று தீர்மானித்துள்ளது

இது குறித்து ஹோண்டா விமானங்கள் தயாரிப்புப் பிரிவின்  தலைவர் மிசிமசா ஃபுஜினொ கூறுகையில், “அமெரிக்காவில் தயாரான எங்கள் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்குத் தேவையான கருவிகளை விமான நிலையங்களில் நிறுவ ஜப்பான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்சமயம் இந்த விமானங்களின் விலை 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள  வணிக நிர்வாகிகள் மற்றும் செல்வந்தர்களிடம் விமானங்களை விற்பனை செய்வது பற்றி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது.”

#TamilSchoolmychoice

honda-jet“ஜப்பானிலும் இந்த விமானங்களை வாங்குவதற்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  குறிப்பாக வர்த்தக ரீதியாக தொடர் பயணங்களை மேற்கொள்ளும் வர்த்தக நிர்வாகிகள் இத்தகைய விமானங்களை பெரிதும் விரும்புகின்றனர்.

எனினும், எங்கள் நிறுவனமும் ஜெட் விமானங்களை விற்பனை செய்ய பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த 5 வருடங்களில் ஹோண்டா நிறுவனம் விமான வர்த்தகத்தை, இலாபகரமானதாக மாற்ற பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றது.  எதிர்வரும் 2017-ம் ஆண்டிற்குள் 80 முதல் 100 ஜெட் விமானங்களை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.