Home வணிகம்/தொழில் நுட்பம் ‘ஏர்பேக்’ கோளாறு: 144,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா மலேசியா!

‘ஏர்பேக்’ கோளாறு: 144,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஹோண்டா மலேசியா!

579
0
SHARE
Ad

hondaகோலாலம்பூர், ஜூலை 10 – கார் விபத்துகளின் போது ஓட்டுனரின் உயிரைக் காக்கும் ‘ஏர்பேக்’ (Airbag) பகுதியில் கோளாறு இருப்பதை அறிந்து, ஹோண்டா மலேசியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து 143,970 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஹோண்டா மலேசியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிட்டி 2006-2012, சிவிக் 2006-2011, சிவிக் ஹைப்ரிட் 2007-2011, சிஆர்-வி 2007-2011, இன்சைட் 2011-2012, ஜேஸ் 2009-2012 மற்றும் ஸ்ட்ரீம் 2007-2012 ஆகிய ஹோண்ட ரக கார்களில் ஏர்பேக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.”

“அதனால் வாடிக்கையாளர்களிடம் கார்களை திரும்பப் பெரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஏர்பேக் கோளாறு தொடர்பான சிரமங்களுக்காக எங்கள் வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இதனை சரி செய்வதற்கு வாடிக்கையாளர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“பழுது நீக்கம் செய்வது தொடர்பாக, நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம். அதனை பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்கள், தங்கள் கார்களை அருகில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா விற்பனையாளரிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு, வாடிக்கையாளர்கள் 1-800-88-2020 (கட்டணமில்லை) என்ற தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது www.honda.com.my என்ற இணைய தளம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.