Home இந்தியா 5 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி28 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.  

5 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி28 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.  

472
0
SHARE
Ad

1சென்னை,ஜூலை10- பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவற்காக இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆண்டிரிக்ஸ், விருப்பமுள்ள நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘டிஎம்சி.3-1’, ‘டிஎம்சி.3-2’, ‘டிஎம்சி.3-3’ ஆகிய 3 செயற்கைகோள்களும், அமெரிக்காவைச் சேர்ந்த சர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனத்தின் மைக்ரோ மற்றும் நானோ என 2 செயற்கைக்கோள்களும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் மூலம் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படுகின்றன.

இதற்கான  62.5 மணி நேர எண்ணிக்கை (கவுண்ட்டவுன்) கடந்த 8-ந்தேதி காலை 7.30 மணிக்குத் தொடங்கியது.

#TamilSchoolmychoice

தற்போது ராக்கெட்டுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பும் பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, ராக்கெட் ஏவுவதற்குத் தயார் நிலையில் உள்ளது.

புவிவளம் மற்றும் மண்வளத்தை ஆய்வு செய்வதற்காக இந்தச் செயற்கைக்கோள்கள்  விண்ணில் ஏவப்படுகின்றன.

ஒவ்வொரு செயற்கைக்கோளும் 3 மீட்டர் நீளமும், 447 கிலோ எடையும் கொண்டவையாகும்.

4 எரிபொருள் நிலைகளும், 44.4 மீட்டர் உயரமும் கொண்ட  பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மொத்த எடை 320 டன் ஆகும்.

இவை பூமியில் இருந்து 120 டிகிரியில் தனித்தனியாகக் சுழன்று வந்து பூமியைப் படம் பிடித்துப் புவிவளம் மற்றும் மண்வளத்தை ஆய்வு செய்வதற்கான படங்களை அனுப்பி வைக்க உள்ளன.