Home இந்தியா இஸ்ரோ நேற்றிரவு புதிய சாதனை படைத்தது!

இஸ்ரோ நேற்றிரவு புதிய சாதனை படைத்தது!

526
0
SHARE
Ad

pslv2_1974034gஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 11- ஒரே சமயத்தில் மொத்தம் 1440 கிலோ எடை கொண்ட 5 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி இந்தியாவின் வானியல் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

இஸ்ரோ கடைசியாக, பிரான்சின் ஸ்பாட் – 7(175 கிலோ),  ஜெர்மனியின் ஐசாட் (14 கிலோ), கனடாவின் என்எல்எஸ் 7.1 (15 கிலோ),  என்எல்எஸ் 7.2 (15 கிலோ), சிங்கப்பூரின் வெலாக்ஸ் -1 (7 கிலோ) ஆகிய 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி -சி23 ராக்கெட் மூலம் விண்ணுக்கு  அனுப்பியது.

இதன் மொத்த எடை 765 கிலோ ஆகும். இதுதான் அதிகபட்சமாக இருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், தற்போது அனுப்பியுள்ள 5 செயற்கைகோள்களின்  மொத்த எடை 1440 கிலோ ஆகும்.

இது இஸ்ரோவின் புதிய சாதனையாகும்.

மேலும், இந்த 5 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களையும் சேர்த்து,  இஸ்ரோ  இதுவரை 45 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.