Home உலகம் இங்கிலாந்தில் வாட்ஸ் அப்பிற்கு விரைவில் தடை!

இங்கிலாந்தில் வாட்ஸ் அப்பிற்கு விரைவில் தடை!

637
0
SHARE
Ad

whatsappஇங்கிலாந்து, ஜூலை 11- சமீபகாலமாக இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்திற்கு வாட்ஸ் அப் போன்ற நட்பு ஊடகங்களே காரணம் என இங்கிலாந்து அரசு எண்ணுகிறது.

எனவே, இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களை இங்கிலாந்து அரசு தடை செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கான புதிய சட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்ற உள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஸ்நாப் சாட், ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்ற ஊடகங்களுக்கு இங்கிலாந்தில் நிரந்தரமாகத் தடை ஏற்படும் என்று தெரிகிறது.