Home வணிகம்/தொழில் நுட்பம் சிறிய ரக ஜெட் விமானங்களை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

சிறிய ரக ஜெட் விமானங்களை அறிமுகப்படுத்தியது ஹோண்டா!

780
0
SHARE
Ad

Honda's HondaJet business aircraft lands for the first time in Tokyoடோக்கியோ, ஏப்ரல் 24 – கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் தயாரிப்பில் பெயர் பெற்று விளங்கும் ஹோண்டா நிறுவனம், வணிக நிர்வாகிகள் மற்றும் செல்வந்தர்களுக்காக சிறிய ரக ஜெட் விமானங்களின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அந்நிறுவனம் கடந்த புதன் கிழமை டோக்கியோவில் உள்ள  ஹனேடா விமான நிலையத்தில் தனது ஜெட் விமானங்களை காட்சிப்படுத்தியது.

Honda's HondaJet business aircraft lands for the first time in Tokyoஹோண்டா நிறுவனத்தின், நிறுவனரான சோய்செரோ ஹோண்டாவின் நீண்ட நாள் கனவான ஜெட் விமானங்களின் தயாரிப்பு நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக நிறுவன அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர்.

HONDA STARTS SALES OF HONDA JETஇது பற்றி ஹோண்ட விமான தயாரிப்பு பிரிவின் தலைவர் மிசிமசா ஃபுஜினொ கூறுகையில், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த ஜெட் விமானங்கள், இன்னும் சில வருடங்களில் ஜப்பானிலும் தனது வர்த்தகத்தை தொடங்க இருக்கிறது. ஐந்து முதல் ஆறு இருக்கைகள் கொண்ட இந்த ஜெட் விமானங்களின் விலை 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ”

#TamilSchoolmychoice

“இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் விமானம் வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த வருடத்தின் இறுதிக்குள் விமானம் விநியோகம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.