Home இந்தியா ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் 37 ஓட்டங்களில் மும்பாய் இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது

ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் 37 ஓட்டங்களில் மும்பாய் இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது

632
0
SHARE
Ad

Delhi Daredevils logoபுதுடெல்லி, ஏப்ரல் 24 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், மும்பாய் இந்தியன்ஸ் அணியும் களமிறங்கின.

முதல் பாதி ஆட்டத்தில், டெல்லி அணி அபாரமாக ஆடி, 20 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

ஷிரேயாஸ் ஐயர் மற்றும் ஜே.பி.டுமுனி இருவரும் இணைந்து 154 ஓட்டங்கள் எடுத்தது, டெல்லி அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டில் இதுதான் இணைந்த இருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களை நிறைவு செய்தபோது 9 விக்கெட்டுகளை இழந்து, 153 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லி அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 9 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி கண்டு வந்துள்ள டெல்லி அணி சுவைத்திருக்கும் முதல் வெற்றி இதுவாகும்.

mumbai-indians

இன்று குஜராத்தின் மொதெரா நகரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.