ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக்கின் தலைமையில் முதல் முறையாக வெளியாகும் இந்த புதிய கருவி, பெரும்பான்மையான ஐபோன் பயனர்களைக் கவர்ந்துள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி இதற்கான முன்பதிவுகள் தொடங்கின. சுமார் 6 மணி நேரங்களில் மே மாதம் முழுவதற்குமான முன்பதிவுகள் நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது ஆப்பிள் வாட்ச்சிற்கான விற்பனை தொடங்கப்பட்டாலும், பயனர்கள் நேரடியாக ஆப்பிள் ஸ்டோர்களில் சென்று ஆப்பிள் வாட்ச்சை வாங்க முடியாது.இந்த நாளில் ஆப்பிள் வாட்ச் வாங்குவதற்கான முன் பதிவினை பெற்றவர்கள் மட்டுமே வாங்க முடியும்.
இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கருவிக்கான ஆப் ஸ்டோரை நேற்று நிறுவி உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இன்று ஆப்பிள் வாட்ச்சை பெரும் பயனர்கள், இந்த ஆப் ஸ்டோரில் தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியும். அதற்காக, இதுவரை 3000 செயலிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.