கோலாலம்பூர் – மலேசியாவில் கடன் மற்றும் பற்று அட்டைகளைப் பயன்படுத்தும் உரிமையாளர் கையெழுத்திடும் இடும் வழக்கத்தை மாற்றி இனி தனிப்பட்ட அடையாள எண்ணை (PIN – Personal identification number) அறிமுகம் செய்கிறது பேங்க் நெகாரா.
மலேசியாவில் தற்போது 8 மில்லியன் கடன் அட்டை மற்றும் 31 மில்லியன் பற்று அட்டைகள் புழக்கத்தில் உள்ளதாகவும், அவை வரும் 2017 ஜனவரி மாதத்திற்குள் மாற்றம் செய்யப்பட்டு, இனி ‘PIN’ முறை அறிமுகம் செய்யப்படும் என்று பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகளை வைத்திருக்கும் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று புதிய அட்டைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, நியூ சியாலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இந்த முறை தற்போது மலேசியாவிலும் அறிமுகமாகின்றது.
எனினும், அமெரிக்காவில் இன்னும் கையெழுத்து முறை தான் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.