ஜார்ஜ் டவுன் – பின்ஹார்ன் சாலையில் 2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் சொத்து ஒன்றை வாங்கிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.
அதனையடுத்து, ஜார்ஜ் டவுன், ஜாலான் சுல்தான் அகமட் ஷாவில் உள்ள பினாங்கு மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்கள் கூடத் தொடங்கினர்.
இந்நிலையில், லிம்மின் வழக்கறிஞர் ஆர்.எஸ்.என்.ராயர் அத்தகலை மறுத்துவிட்டதாக ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எம்ஏசிசி அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டத்தை லிம் நடத்துவதாக நம்பப்படுகின்றது.