
கோலாலம்பூர்: ஜசெக தலைவர் லிம் குவான் மீது அவதூறு கூறியதற்காக அவருக்கு 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பை எதிர்த்து டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மேல்முறையீடு செய்வார்.
அந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தான் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்திருப்பதாகக் கூறிய முஹிடின், நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப, சமூக ஊடகங்களில் லிம் குவான் எங்கிற்கு எதிராகப் பதிவிட்ட பதிவுகளை அகற்றினார்.

பாகான் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான லிம் குவான் எங், நிதியமைச்சராக இருந்த காலத்தில் யாயாசான் அல்புகாரி அறக்கட்டளைக்கான வரிவிலக்கு சலுகையை ரத்து செய்தார் என முஹிடின் அறிக்கை விடுத்து அதனை சமூக ஊடகங்களிலும் பதிவிட்டார்.
அந்த அறிக்கைகளில் உண்மையில்லை, தன் மீது அவதூறு பரப்பும் தீய உள்நோக்கம் கொண்டது என லிம் முஹிடினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் முஹிடின் அறிக்கைகள் அவதூறானவை எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம் லிம் குவான் எங்கிற்கு முஹிடின் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.