Home கலை உலகம் நடிகர் டில்லி கணேஷ் காலமானார்!

நடிகர் டில்லி கணேஷ் காலமானார்!

420
0
SHARE
Ad
நடிகர் டில்லி கணேஷ்

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல குணசித்திர நடிகர் டில்லி கணேஷ் நேற்று சனிக்கிழமை (9 நவம்பர்) இரவு 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விமானப் படையில் பணிபுரிந்த அவர் டில்லியில் இருந்தபோது அங்கு மேடையேற்றப்பட்ட நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் சென்னை வந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அவருக்கு இயக்குநர் கே.பாலசந்தர் தனது ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் முதன் முதலில் வாய்ப்பளித்தார். சாதாரண கணேஷாக இருந்த அவருக்கு டில்லி கணேஷ் என்று பெயரும் சூட்டியவர் பாலசந்தர்தான்.

#TamilSchoolmychoice

அதன் பிறகு பல படங்களில் பல்வேறு தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார்.

அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களில் தனது முத்திரையைப் பதித்தார் டில்லி கணேஷ்.

டில்லி கணேஷ் இறுதிச் சடங்குகள் நாளை திங்கட்கிழமை (நவம்பர் 11) சென்னையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.