Home Featured கலையுலகம் “மாங்கல்யம் தந்துனானேனா” – புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்!

“மாங்கல்யம் தந்துனானேனா” – புத்தம் புதிய தொலைக்காட்சிப் படம்!

1371
0
SHARE
Ad

MTகோலாலம்பூர் – “ஒரு போதும் பிரிவொன்று இல்லை.. அன்பே .. பிரிந்தாலும் நான் வாழமாட்டேன்” .. கடந்த சில வாரங்களாக, அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களின் மனதை இந்த இசையும், வரிகளும் வருடியிருக்கும், தன்னை அறியாமல் முணுமுணுக்க வைத்திருக்கும்.

இப்பாடல் இடம்பெற்றுள்ளது “மாங்கல்யம் தந்துனானேனா” என்ற தொலைக்காட்சிப் படத்தில் தான். மிக விரைவில் அஸ்ட்ரோ வானவில்லில் ஒளிபரப்பாகவுள்ளது.

MT2மலேசியத் தொலைக்காட்சிப் படங்களில், புத்துயிரும், புத்துணர்ச்சியும் அளிப்பது போல், உருவாகியிருக்கும் இப்படத்தின் காட்சிகள், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

கபிலன் கதையில், கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் , பால கணபதி வில்லியம், ரெனீதா வீரையா, லிங்கேஸ்வரன், குபேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இர்வான் பி முனிர் ஒளிப்பதிவும், சங்கர் இந்திரா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

பிஜிடபிள்யூ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இத்தொலைக்காட்சிப் படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி, இரவு 9.30 மணியளவில், அஸ்ட்ரோ வானவில், அலைவரிசை 201-ல் ஒளிபரப்பாகவுள்ளது.

இசை

MT3இத்தொலைக்காட்சிப் படத்தின் இசை, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளதோடு, கேட்டவுடன் மனதில் ஒட்டிக் கொள்ளும் வகையில் உள்ளது.

பினாங்கைச் சேர்ந்த வர்மன் இளங்கோவன் இசையமைத்து பாடியுள்ளார். சுருதீஸ் திருமாறன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். நிரோஷன் பிண்ணனிக் குரல் கொடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், இத்தொலைக்காட்சிப் படத்தில் இடம்பெற்ற, “என்னவோ” என்ற பாடல், தனிப்பாடலாக யுடியூப்பில் வெளியிடப்பட்டது.

கேட்டவுடன் ஈர்க்கும் வகையில் உள்ள அப்பாடலை கீழ்காணும் யூடியூப் இணைப்பின் வழியாகக் காணலாம்: