ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)- இல் முதல் ஒளிபரப்பு காணும் ‘நான் செத்துப் பொழைச்சவண்டா’ த்ரில்லர் நகைச்சுவைத் தொடரைக் கண்டு மகிழுங்கள்
பிப்ரவரி 17 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் “நான் செத்துப் பொழைச்சவண்டா” எனும் த்ரில்லர் வகையிலான பரபரப்பான நகைச்சுவைத் தொடரை அனைத்து மலேசியர்களும் எதிர்பார்க்கலாம்.
கணவன்-மனைவி தம்பதிகளான கபிலன் புலேந்திரன் மற்றும் நந்தினி கணேசன் ஆகியோரால் முறையே இயக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த விண்மீன் பிரத்தியேகத் தொடர், எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு முக்கிய அறிகுறிகள் இல்லாமல் மீண்டும் உயிருடன் திரும்பும் நயன்மாறனைச் சித்தரிக்கிறது. அவரது விவரிக்க முடியாத உயிர்த்தெழுதலுடன் உலகம் போராடுகையில், நயன்மாறன் புகழ், குடும்பம் மற்றும் திடுக்கிடும் கண்டுபிடிப்பை வழிநடத்துகிறார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மிஸ்டர் மற்றும் மிஸ் என்ற இரண்டு தனியார் செயல்பாட்டாளர்கள், நயன்மாறனின் நிலையின் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய்ந்து வெளிப்படுத்தும் பணியில் ஈடுபடும்போது இந்தத் தொடர் மேலும் சுவாரசியமடைகிறது. மிஸ்டர் மற்றும் மிஸ் ஆகியோரின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தும் பணியில் நயன்மாறன் வெற்றி பெற்றாரா என்பதைச் சார்ந்தே இந்தத் தொடரின் கதைக்களம் அமைந்துள்ளது. அதனை அறிய, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன்தேவி, டத்தோ கீதாஞ்சலி ஜி, செயிண்ட் டி.எஃப்.சி, சந்தியா லார்ட் மற்றும் பலர் உட்படப் புகழ்பெற்ற உள்ளூர் நடிகர்கள் வரிசையைக் கொண்டிருக்கும் அற்புதமான நான் செத்துப் பொழைச்சவண்டா தொடரைக் காணுங்கள்.
ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்புக் காணும் நான் செத்துப் பொழைச்சவண்டா தொடரின் புதிய அத்தியாயங்களை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம 49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500 எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.