நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
எனினும், மோடியின் எதிர்ப்பாளராக பாஜகவில் வலம் வரும் இந்திய நாடாளுமன்ற மேலவை (ராஜ்ய சபா) உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்கனவே வழங்கியிருக்கும் சலுகைகள் தவிர்த்து – இந்த சந்திப்பின்வழி புதிதாக என்னென்ன சலுகைகளை வழங்கியது – என்பதைத் தெரிவிக்குமாறு மோடிக்கு சவால் விட்டார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்களைக் கைவிலங்கிட்டு, இராணுவ சரக்கு விமானத்தில் அமெரிக்கா திருப்பி அனுப்பியது இந்திய நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கடுமையான கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மோடி-டிரம்ப் சந்திப்பு அமைந்திருக்கிறது.