Home நாடு முஸ்லீம் அல்லாதோருக்கான அமைச்சர் – அமைச்சரவை நிராகரித்தது!

முஸ்லீம் அல்லாதோருக்கான அமைச்சர் – அமைச்சரவை நிராகரித்தது!

132
0
SHARE
Ad

புத்ராஜெயா : இஸ்லாமிய மதவிவகாரங்களுக்கான அமைச்சர் இருப்பதுபோல் முஸ்லீம் அல்லாதோருக்கான தனி அமைச்சர் நியமிக்கப்படவேண்டும் என ஜசெகவைச் சேர்ந்த ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹூய் தெரிவித்திருக்கும் கருத்தை இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) கூடிய அமைச்சரவை நிராகரித்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அந்தக் கருத்து ரவுப் நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என்றும் அன்வார் தெரிவித்தார். அமைச்சரவை உறுப்பினர்களில் யாரும் இந்தக் கருத்துடன் உடன்படவில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

இதுகுறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தொடர்புக்குழுத் தலைவர் லீ சியான் சுங், அத்தகைய நியமனம் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சரவையை சிறிதாக வைத்திருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு நேர்எதிர்மாறாக அமையக் கூடும் என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து பாஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நடப்பு ஒற்றுமைத் துறை அமைச்சு, முஸ்லீம் அல்லாதோரின் விவகாரங்களைக் கவனிக்கும் மையமாக செயல்பட முடியும் என்றும் சில தரப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.