Home உலகம் புடின்-டிரம்ப் ஒரு மணி நேர தொலைபேசி உரையாடல் – உக்ரேன் போர் நிறுத்தம் வருமா?

புடின்-டிரம்ப் ஒரு மணி நேர தொலைபேசி உரையாடல் – உக்ரேன் போர் நிறுத்தம் வருமா?

104
0
SHARE
Ad
ரஷிய அதிபர் – விளாடிமிர் புடின்

வாஷிங்டன்: ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் தான் ஒரு மணி நேரம் தொலைபேசி உரையாடலை நிகழ்த்தியதாகவும் அதைத் தொடர்ந்து உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் தொலைபேசி வழி கலந்துரையாடல் நடத்தியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உக்ரேன் போர் தொடர்பில் புடினுடன் சாதகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷியா – உக்ரேன் இடையிலான போர் ஒரு முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.