Home நாடு “சைட் மொக்தார் அல்-புகாரி நெல் விவசாயிகளுக்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறார்” – அன்வார் அறிவிப்பு

“சைட் மொக்தார் அல்-புகாரி நெல் விவசாயிகளுக்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்குகிறார்” – அன்வார் அறிவிப்பு

59
0
SHARE
Ad
சைட் மொக்தா,ர் அல்-புகாரி

புத்ரா ஜெயா: நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் அரிசி விநியோக வணிகத்தில் முக்கியப் பங்கு வகிப்பவருமான டான்ஸ்ரீ சைட் மொக்தார் அல்-புகாரி ஏழை நெல் விவசாயிகளுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வண்ணம் 30 மில்லியன் ரிங்கிட்டை வழங்க முன்வந்திருக்கிறார் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

சைட் மொக்தாரைத் தான் தொடர்பு கொண்டதாகவும் அதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு 30 மில்லியன் ரிங்கிட் வழங்க அவர் முன்வந்திருப்பதாகவும் அன்வார் மேலும் தெரிவித்தார்.

சைட் மொக்தாரின் இந்த நன்கொடை நேரடியாக ஏழை நெல் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அன்வார் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அரிசி விநியோக நிறுவனமான பெர்னாஸ் 60 மில்லியன் ரிங்கிட்டை ஏழை நெல் விவசாயிகளுக்கு வழங்க முன்வந்ததற்காகவும் அன்வார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதற்கிடையில் பிப்ரவரி 16 முதல் நெல்லுக்கான அடிப்படை விலை ஒரு டன் 1,300 ரிங்கிட் என்பதிலிருந்து ஒரு டன்னுக்கு 1,500 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு அறிவித்திருக்கிறார்.

அரிசியின் விலை ஒரு கிலோவுக்கு 2 ரிங்கிட் 60 காசு என்பதை நிலைநிறுத்த அரசாங்கம் மேலும் 150 மில்லியன் ரிங்கிட் தொகையை மானியங்களாக செலவிடும் என்றும் முகமட் சாபு கூறியிருக்கிறார்.