Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் கோலாகல நிறைவு விழா (படக் காட்சிகள்)

ஒலிம்பிக்ஸ் கோலாகல நிறைவு விழா (படக் காட்சிகள்)

918
0
SHARE
Ad

olympics-closing-7

ரியோ டி ஜெனிரோ – ஞாயிற்றுக்கிழமை இரவுடன் (மலேசிய நேரம் திங்கட்கிழமை காலை 7.00 மணி) முடிவுக்கு வந்த ஒலிம்பிக்ஸ் திருவிழாவின் நிறைவு விழா கண்கொள்ளாக் காட்சியாக, பல வண்ணமயமான நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றது.

olympics-Closing-2

#TamilSchoolmychoice

வாணவேடிக்கைகள் இன்றைய நிறைவு விழாவின் மையமாகத் திகழ்ன. நிறைவு விழா நடைபெற்ற மரக்கானா அரங்கத்தின் கூரையும், வாண வேடிக்கைகளும் ஒரே பச்சை நிறமாக வெடித்துக் கிளம்பிய காட்சி…

olympics-closing-9

அரங்கம் முழுவதும் வண்ணமயமான ஒளிவீச்சுகளால் கண்ணைப் பறிக்கும் காட்சி…

olympics-closing-3

சம்பா நடனத்தோடு, வண்ணங்களின் கலவையான நடனக் காட்சி…

olympics-closing-4

நிறைவு விழாவில் அணிவகுத்துச் செல்லும் விளையாட்டாளர்கள்…

olympics-closing-5

அடுத்த ஒலிம்பிக்ஸ் நடைபெறப்போவது 2020-இல் ஜப்பானின் தோக்கியோ நகரில்! அதனைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக்ஸ் கொடியை ஒலிம்பிக் மன்றத் தலைவர் தோமஸ் பாச் மற்றும் ரியோ டி ஜெனிரோ நகரத் தலைவர் (மேயர்) எடுவார்டோ பயஸ் இருவரும்  தோக்கியோ நகரத் தலைவர் (மேயர்) யுரிகோ கொய்கே வசம் ஒப்படைத்த காட்சி…

olympics-closing-6-

முதலில் ஏதோ வீடியோ கேம்ஸ் போன்ற பின்னணியோடு காட்டப்பட்ட ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, உண்மையிலேயே மேடையில் நேரடியாகத் தோன்றி அனைத்து பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஜப்பானியப் பிரதமர் ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் கலந்து கொள்வார் என்பது இறுதி வரை இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

olympics-closing-8

பல வண்ண ஆடைகளில் பச்சைப் பசுமையை எடுத்துக் காட்டும் நடனம்…

olympics-closing-10

நவீன ஆடைகளுடன் வித்தியாசமான பாரம்பரிய ஆடைகளுடன் பங்கேற்பாளர்கள் – நிறைவு விழாவில்….

olympics-closing-11

அடுத்த ஒலிம்பிக்ஸ் ஜப்பானில் என்பதால், ஜப்பானியக் குழுவினர் படைத்த நடனக் காட்சி….

olympics-Closing-Ceremony-1

பிரேசில் எப்போதுமே ‘திறந்த’ கவர்ச்சிக்குப் பெயர் போன நாடு. அதனால் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா, நிறைவு விழா எல்லாவற்றிலும் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. அத்தகைய நடனக் காட்சிகளில் ஒன்று.

olympics-Closing-Ceremony-12

மேடை முழுவதும் கைகளைப் போன்ற தோற்றம் கொண்ட வடிவங்களுடன் பாடல் – ஆடல்

-செல்லியல் தொகுப்பு