Home Featured உலகம் பிரேசில் குற்றவாளியின் மனைவியுடன் உசேன் போல்ட் உல்லாசம்!

பிரேசில் குற்றவாளியின் மனைவியுடன் உசேன் போல்ட் உல்லாசம்!

915
0
SHARE
Ad

Bolt1 (2)ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக் போட்டிகளில், ஜமைக்கா குழுவில் இடம்பெற்று தங்கங்களைக் குவித்த கையோடு, ரியோ நகரிலேயே தனது 30-வது பிறந்தநாளை கூத்தும் கும்மாளமுமாகக் கொண்டாடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளார் உசேன் போல்ட்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரியோ நகரிலுள்ள கேளிக்கை விடுதி ஒன்றிற்குச் சென்ற உசேன் போல்ட், அங்கு உற்சாக மிகுதியில் பெண்களுடன் ஆபாசமான முறையில் ஆட்டம் போட்டுள்ளார். அக்காணொளி அன்றைய தினமே பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் அதிவேகமாகப் பரவியது.

அதனைத் தொடர்ந்து, பிரேசிலைச் சேர்ந்த 20 வயது மாணவியான ஜேடி டூரேட் என்பவர், வாட்சாப் மூலமாகத் தனது நண்பர்களுக்கு அனுப்பிய படங்கள், இன்னும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் உசேன் போல்ட்டும், ஜேடியும் படுக்கையில் இருந்தபடி எடுத்துள்ள படங்கள் தான் அவை.

#TamilSchoolmychoice

Bolt1 (1)இந்த ஜேடி டூரேட் யாரென்றால், பிரேசில் குண்டர் கும்பல் ஒன்றில் உறுப்பினராக இருந்த டக்லஸ் டொனாடோ பெரீரா என்பவரின் மனைவி என்று பிரேசிலின் முக்கிய ஊடகங்கள் கூறுகின்றன.

பிரேசில் போலீசாரால் பட்டியலிடப்பட்டுள்ள மிக ஆபத்தான குற்றவாளியாக பெரீரோ இருந்துள்ளார். அண்மையில் அவர் இறந்துவிட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, அன்றைய தினம் உசேன் போல்ட் வேறு சில பெண்களுடனும், ஆபாச அசைவுகள், உதட்டு முத்தம் என உல்லாசமாக இருந்துள்ளது, தொடர்ந்து வெளியான படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உசேன் போல்ட்டின் காதலி, ஜமைக்காவைச் சேர்ந்த காசி பெனெட், இந்த லீலைகளைப் பார்த்து, தனது டுவிட்டர் பக்கத்தை மூடிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

காசி பெனெட்டுடன் மிக நீண்ட நாட்களாக உறவு முறையில் இருந்து வந்த உசேன் போல்ட்டுக்கு, அவரை மணந்து கொள்ளும் திட்டமும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.