Home Featured உலகம் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களில் ஒன்றை இழந்தார்!

உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களில் ஒன்றை இழந்தார்!

936
0
SHARE
Ad

olympics-200m-usain bolt-

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரை 9 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட் அந்தப் பதக்கங்களில் ஒன்றை இழக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.

ஆனால், அதற்குக் காரணம் அவர் அல்ல!

#TamilSchoolmychoice

2008, 2012, 2016 எனத் தொடர்ச்சியாக 3 ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் தலா 3 தங்கங்கள் என மொத்தம் 9 தங்கங்களை இதுவரை பெற்றவர் உசேன் போல்ட்.

ஆனால், இன்று புதன்கிழமை அனைத்துலக ஒலிம்பிக்ஸ் மன்றத்தின் மருத்துவ ஆய்வுக் குழுவினர் விடுத்துள்ள அறிவிப்பின்படி அவர்கள் மேற்கொண்ட சில மறு ஆய்வுகள் காரணமாக, 2008-ஆம் ஆண்டில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 4 x 100 தொடர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்ற ஜமைக்கா குழுவில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் என்பவர் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதன் காரணமாக, அந்தக் குழுவின் வெற்றி நிராகரிக்கப்பட்டதாகவும், இதனால் ஜமைக்கா குழுவினர் 2008-இல் பெற்ற தங்கப் பதக்கங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் அனைத்துலக ஒலிம்பிக்ஸ் மன்றம் அறிவித்திருக்கிறது.

வெற்றி பெற்ற அந்த ஜமைக்கா குழுவில் ஓடியவர்களில் உசேன் போல்ட்டும் ஒருவராவார். தனது சக ஓட்டக்காரர் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்ட காரணத்தால் தனது தங்கப் பதக்கத்தையும்இழக்க வேண்டிய – திருப்பித் தர வேண்டிய -நிலைமைக்கு உசேன் போல்ட் ஆளாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2008 ஒலிம்பிக்சில் 4 x 100  தொடர் ஓட்டப் போட்டியில்  இரண்டாவது இடத்தைப் பிடித்த டிரினிடாட் டொபாகோ நாட்டுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும்.

மூன்றாவது இடத்தைப் பிடித்த ஜப்பானுக்கு தற்போது வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும். நான்காவது இடத்தைப் பிடித்த பிரேசிலுக்கு மூன்றாவது இடத்திற்குரிய வெண்கலப் பதக்கம் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, உசேன் போல்ட்டின் மொத்த தங்கப் பதக்க எண்ணிக்கை 9-இலிருந்து 8-ஆக குறைந்துள்ளது.