Home One Line P2 கொவிட்-19: 2020 ஒலிம்பிக் விளையாட்டு ஆண்டு இறுதிக்கு ஒத்திவைக்கப்படலாம்!

கொவிட்-19: 2020 ஒலிம்பிக் விளையாட்டு ஆண்டு இறுதிக்கு ஒத்திவைக்கப்படலாம்!

679
0
SHARE
Ad
படம்: ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் சீகோ ஹாஷிமோத்தோ

தோக்கியோ: கொவிட்-19 நோய்த் தொற்றைத் தொடர்ந்து 2020 ஒலிம்பிக் விளையாட்டு இந்த ஆண்டின் இறுதிக்கு ஒத்திவைக்கப்படலாம்.

ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் சீகோ ஹாஷிமோத்தோ நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளித்தபோது இதனைத் தெரிவித்தார்.

அனைத்துலக விளையாட்டுப் போட்டியன அது ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற திட்டமிடப்பட்டது.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், இந்த விளையாட்டுப் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதை உறுதிப்படுத்த சிறந்த முயற்சியை மேற்கொள்வதாக ஹாஷிமோடோ கூறினார்.

இதற்கிடையில், அனைத்துலக ஒலிம்பிக் குழு (ஐஓசி) தலைவர் தாமஸ் பாக் கூறுகையில் , இந்த நிகழ்வை திட்டமிட்டபடி நடத்த முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

இன்றுவரை, ஜப்பானில் 299 பேர் கொவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன.