Home One Line P2 ஒலிம்பிக்ஸ் – ஒத்திப் போடுவதற்காக 800 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

ஒலிம்பிக்ஸ் – ஒத்திப் போடுவதற்காக 800 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

697
0
SHARE
Ad

தோக்கியோ – இந்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவிருந்த ஒலிம்பிக்ஸ் 2020 அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அந்த ஒத்திவைப்பு செலவுகளுக்காக 800 மில்லியன் டாலர்களை அனைத்துல ஒலிம்பிக் மன்றம் ஒதுக்கியுள்ளது.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒத்தி வைப்பதால் சில தரப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகளும் இதில் அடங்கும் என அனைத்துலக ஒலிம்பிக்ஸ் மன்றம் விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த ஆண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற வேண்டிய ஒலிம்பிக்ஸ் கொவிட்19 பிரச்சனைகளால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மார்ச் 30-ஆம் தேதி ஒலிம்பிக்ஸ் மன்றம் அறிவித்தது.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 24 வரை ஒலிம்பிக்ஸ் நடைபெறும் என்றாலும் “ஒலிம்பிக்ஸ் 2020” என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.

இதுவரை காணாத நெருக்கடியை ஒலிம்பிக்ஸ் மன்றம் எதிர்நோக்கி இருப்பதாகவும், ஒத்தி வைக்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் போட்டியை மீண்டும் நடத்தும் பெரும் சுமை முதன் முறையாக ஒலிம்பிக்ஸ் மன்றத்திற்கு ஏற்பட்டிருப்பதாகவும் ஒலிம்பிக்ஸ் மன்றத் தலைவர் தோமஸ் பாச் கூறியுள்ளார்.

இதற்கிடையில் எதிர்வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 136-வது அனைத்துலக ஒலிம்பிக்ஸ் குழுவின் கூட்டம் இயங்கலை (ஒன்லைன்) மூலம் நடத்தப்படும் என்றும் ஒலிம்பிக்ஸ் மன்றம் அறிவித்திருக்கிறது.