தோக்கியோ : மலேசியாவின் சைக்கிள் ஓட்ட வீரர் அசிசுல் ஹாஸ்னி அவாங் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இறுதி நாளில் மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.
ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில் நெதர்லாந்து வீரர் ஹேரி லாவ்ரேசன் வெண்கலப் பதக்கம் பெற்ற வேளையில் பிரிட்டனின் ஜேசன் கென்னி முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
தோக்கியோ ஒலிம்பிக்சில் மலேசியா பெறும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
ஏற்கனவே, பூப்பந்துக்கான இரட்டையர் போட்டியில் ஆரோன் சியா – சோ வூய் யிக் இணை வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டது. தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மலேசியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும்.
இன்று சைக்கிள் ஓட்டப் போட்டியில் அசிசுல் ஹாஸ்னி அவாங் வெள்ளிப் பதக்கம் பெற்றதைத் தொடர்ந்து மலேசியா இரண்டு பதக்கங்களை தோக்கியோ ஒலிம்பிக்சின் வெற்றி கொண்டது.
எனினும், தங்கப் பதக்கம் பெறும் மலேசியாவின் இலக்கு இன்னும் நிறைவடையவில்லை.