Home இந்தியா ஒலிம்பிக்ஸ் : ஈட்டி எறிதலில் இந்தியாவுக்குத் தங்கம்

ஒலிம்பிக்ஸ் : ஈட்டி எறிதலில் இந்தியாவுக்குத் தங்கம்

734
0
SHARE
Ad
நீரஜ் சோப்ரா

தோக்கியோ : ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நாளை நிறைவடையவிருக்கும் வேளையில் யாரும் எதிர்பாராத ஒரு விளையாட்டில் இந்தியா இன்று தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டது.

ஜாவலின் எனப்படும் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2008-இல் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்சில் அபினவ் பிந்தரா துப்பாக்கி குறிசுடும் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

அதற்குப் பின்னர் இப்போதுதான் இந்தியா தங்கத்தைப் பெற்றிருக்கிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா பெறும் இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.

#TamilSchoolmychoice

நீரஜ்ஜின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படும் கதாநாயகனாகி விட்டார் அவர்.

ஹரியானாவின் முதல்வர் அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசளித்துள்ளார்.

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மகத்தான நாள். தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்தியாவின் 120 ஆண்டுகாலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூறு கோடி இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையுணர்வை நீங்கள் விதைத்துள்ளீர்கள். உண்மையிலேயே நீங்கள் நாட்டின் நாயகன்” என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.