Home நாடு அம்னோவின் பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நிசார் மொகிதினுக்கு ஆதரவில்லை

அம்னோவின் பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நிசார் மொகிதினுக்கு ஆதரவில்லை

524
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பேராக் மாநிலத்தின் பாரிட் நாடாளுமன்ற உறுப்பினரான அம்னோவின் முகமட் நிசார் சக்காரியா பிரதமர் மொகிதின் யாசினுக்கான ஆதரவை, தான் மீட்டுக் கொள்வதாகவும் தொடர்ந்து அம்னோ உச்சமன்ற முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்படப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களின் பக்கம் 31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மொகிதின் யாசினுக்கு இருப்பதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) அறிவித்திருந்தார்.

ஆனால் அந்தப் பட்டியலில் இருந்த கீழ்க்காணும் மூவர் அம்னோ தலைவர் சைட் ஹாமிடியின் அம்னோ ஆதரவுப் பட்டியலிலும் இருந்தது தெரியவந்தது:

  • பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நிசார் சக்காரியா
  • தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நோ ஓமார்
  • பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அசிஸ் அப்துல் ரஹிம்
#TamilSchoolmychoice

பின்னர் நோ ஓமார், அசிஸ் அப்துல் ரஹிம் இருவரும் தாங்கள் இஸ்மாயில் சாப்ரி கூட்டத்தில் கலந்து கொள்ளவே வந்ததாகவும், தாங்கள் கையெழுத்திட்டது வருகைக்கான பதிவே தவிர, மொகிதினுக்கு ஆதரவு தருவதற்கான கையெழுத்து அதுவல்ல என்றும் தெரிவித்தனர்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் நிசார் சக்காரியா தான் எந்தப் பக்கம் என்பதை தற்போது இதுவரை உறுதிப்படுத்தியிருக்கிறார். கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அறிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இஸ்மாயில் தரப்பிலிருக்கும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 28 என்பது உறுதியாகியிருக்கிறது.