Home உலகம் ஒலிம்பிக்ஸ் : ஒரு வரிச் செய்திகள்

ஒலிம்பிக்ஸ் : ஒரு வரிச் செய்திகள்

1319
0
SHARE
Ad

தோக்கியோ : தோக்கியோவில் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையும் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் குறித்த ஒரு வரிச் செய்திகள் :

இந்தியாவுக்குத் தங்கம்

ஜாவலின் எனப்படும் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பிரேசில் காற்பந்து வெற்றியாளர்

ஆண்களுக்கான காற்பந்து போட்டியில் தென் அமெரிக்க நாடான பிரேசில் இறுதி ஆட்டத்தில் 2-1 கோல் எண்ணிக்கையில் ஸ்பெயினைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளது,

தங்கப் பதக்கங்களில் சீனா முதலிடம்

#TamilSchoolmychoice

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மிக அதிகமான தங்கங்களை வெற்றி கொண்ட நாடாக, 38 பதக்கங்களுடன், சீனா திகழ்கிறது.

அதிகமான பதக்கங்கள் பெற்ற நாடு அமெரிக்கா

மிக அதிகமானப் பதக்கங்களைப் பெற்ற நாடாக 108 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது – என்றாலும், தங்கப் பதக்கங்கள் அதிகமாக வென்ற நாடு என்ற அளவில் 36 தங்கங்களுடன் சீனாவுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

பதக்கப் பட்டியலில் 3-வது இடத்தில் ரஷியா

பதக்கப் பட்டியலில் ரஷியா விளையாட்டாளர்கள் குழு 68 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில்….

அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2024-இல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவிருக்கிறது.