கோலாலம்பூர் – அபு சயாப் அமைப்பினரால் கடத்தி வைக்கப்பட்டுள்ள மலேசிய பிணைக் கைதிகளிடமிருந்து அவசரத் தகவல் ஒன்று காவல்துறையினருக்கு வந்துள்ளதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தங்களை விடுவிக்க உதவுமாறு காவல்துறையை மன்றாடியுள்ளனர்.
“இதற்கு மேல் எங்களால் தாங்கமுடியாது. நாங்கள் மிகவும் வலியுடன் உள்ளோம். நாங்கள் அனைவரும் நோய்வாய்ப்பட்டுள்ளோம். எங்களது உடம்பில் வெட்டுக்காயங்கள் உள்ளன. நாங்கள் பலவீனமாக உள்ளோம். சாப்பிட உணவு இல்லை. அதைவிட நாங்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றோம். இங்குள்ளவர்கள் எங்களை சுடப் போகிறார்கள். தயவு செய்து உதவுங்கள்” என்று அவர்கள் மன்றாடியுள்ளனர்.
இவர்கள், கடந்த ஜூலை 18-ம் தேதி சபாவின் கிழக்குக் கடற்பகுதியில், லகாட் டத்து அருகே அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட 5 மலேசியர்கள் ஆவர்.