Home Featured உலகம் ஹிலாரி-டிரம்ப் விவாதத்தின் முக்கிய மோதல் தருணங்கள் (தொகுப்பு 1)

ஹிலாரி-டிரம்ப் விவாதத்தின் முக்கிய மோதல் தருணங்கள் (தொகுப்பு 1)

929
0
SHARE
Ad

us-presidential-3rd-debate-hilary-trump

லாஸ் வெகாஸ் – இன்று வியாழக்கிழமை மலேசிய நேரப்படி  காலை 9.00 மணிக்கு நடைபெற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன்-டொனால்ட் டிரம்ப் இடையிலான 3-வது விவாதத்தில் பல கட்டங்களில் இருவரும் நேரடியாக ஒருவரை ஒருவர் தங்களின் விவாதங்களை முன்வைத்துத் தாக்கிக் கொண்டனர்.

விவாதத்தின் முதல் கேள்வியாக அமைந்தது, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனங்கள் குறித்த விவகாரமாகும். இருவரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்த பின்னர், இரண்டாவது விவகாரமாக, பெண்கள் கருச்சிதைவு செய்து கொள்ளும் உரிமைகள் குறித்து இருவரும் மோதிக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

பின்னர் மூன்றாவது விவகாரமாக, விவாதத்தில் எழுந்தது, அமெரிக்காவின் தென்பகுதியிலிருக்கும் மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் அகதிகள் பிரச்சனையாகும்.

கள்ளக் குடியேறிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இருவரும் தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர்.அமெரிக்காவின் எல்லைகளை வெளிநாட்டுக்காரர்களுக்கு திறந்து விடுவதுதான் ஹிலாரியின் நோக்கம் என டிரம்ப் சாட, எல்லைகளைத் திறந்து வைப்பதல்ல தனது நோக்கம் – மாறாக, முறையான குடியேற்றத்தை வடிவமைப்பதுதான் தமது இலக்கு – என ஹிலாரி பதிலளித்தார்.

ஒரு கட்டத்தில் ஹிலாரி, ரஷியாவும் அதன் அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவுக்கு எதிரான தகவல்களை பரப்புகின்றார்கள் என்றும், அதிபர் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க  ரஷியா முயற்சி செய்கின்றது என்றும் குற்றம் சாட்டினார். அதற்கு ஏற்ப டிரம்ப் நடந்து கொள்கின்றார் என்றும் அவர் சாடினார்.

(மேலும் தொடரும்)

தொகுப்பு – இரா.முத்தரசன்