Home Featured வணிகம் பாக்டீரியா மாசு தான் மேரிகோல்ட் பால் திரும்பப்பெறக் காரணம் – சுகாதாரத்துறைத் தகவல்!

பாக்டீரியா மாசு தான் மேரிகோல்ட் பால் திரும்பப்பெறக் காரணம் – சுகாதாரத்துறைத் தகவல்!

733
0
SHARE
Ad

marigold-milkகோலாலம்பூர் – 200 எம்எல் மற்றும் 1 லிட்டர் கொண்ட மேரிகோல்ட் எச்எல் பால் பொருட்களை மலேசியா மில்க் செண்ட்ரியான் பெர்ஹாட் திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளதற்குக் காரணம், அதைத் தயாரிக்கும் போது, அடைப்பானில் ஏற்பட்ட சேதத்தால், பாக்டீரியா மாசுபாடு அடைந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எனினும், தாங்கள் நடத்திய விசாரணையில், அந்நிறுவனம் தேவையான சரிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டது என்றும் சுகாதாரத்துறை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், அந்நிறுவனத்தின் பொருட்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், திரும்பப் பெறப்பட்ட பொருட்கள் சரியான முறையில் அகற்றப்பட்டு வருகிறதா? என்பதையும் ஆராய்ந்து வருவதாகவும் டாக்டர் நூர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமை, மலேசியாவின் பிரபல பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான மலேசியா மில்க் செண்ட்ரியான் பெர்ஹாட், திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதாவது, 200 எம்எல் மற்றும் 1 லிட்டர் கொண்ட மேரிகோல்ட் எச்எல் பால் பொருட்களை தாங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப் போவதாக அறிவித்தது.

எனினும், அவை தீபகற்ப மலேசியாவில் நவம்பர் 7-ம் தேதியும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் நவம்பர் 11-ம் தேதியும் காலாவதியாகும் தேதி கொண்டவையாக இருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

மேரிகோல்ட் எச்எல் சாக்லேட் மிலக்கின் பாகுத்தன்மை வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “வாடிக்கையாளரின் கருத்தில் மேரிகோல்ட் எச்எல் சாக்லேட் மில்க் தான் முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் நிறுவனம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் படி,மற்ற பொருட்களான மேரிகோல்ட் எச்எல் சாக்லேட் மில்குடன், மேர்கோல்ட் எச்எல் பிளெயின் மில்க் மற்றும் மேரிகோல்ட் எச்எல் ஸ்ட்ராபெரி மில்க் ஆகியவையும் திரும்பப் பெறப்படுகின்றன. அதோடு, மேரிகோல்ட் எச்எல் மில்க் வித் பிளான்ட் ஸ்டெரோல்சும் திரும்பப் பெறப்படுகின்றது. என்றாலும் அவை 1 லிட்டர் புட்டிகள் தான்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.