Home Featured நாடு பினாங்கு எஸ்கலேட்டர் விபத்து: தீவிர சிகிச்சையால் குழந்தை மீண்டு வருகின்றது!

பினாங்கு எஸ்கலேட்டர் விபத்து: தீவிர சிகிச்சையால் குழந்தை மீண்டு வருகின்றது!

540
0
SHARE
Ad

penang-escalatorஜார்ஜ் டவுன் – கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் ஜாம்புல் வணிக வளாகத்தில், எஸ்கலேட்டரில் ஏறும் போது தந்தையின் தோளில் இருந்து தவறி விழுந்த 3 வயதுப் பெண் குழந்தை தற்போது மெல்ல மீண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்ததால், தலையில் பலத்த காயமடைந்து உள்ளே இரத்தக் கசிவு ஏற்பட்டு அக்குழந்தை சுயநினைவின்றி இருந்து வருகின்றது.

எனினும், நேற்று வரை செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த அக்குழந்தைக்கு, தற்போது அது நீக்கப்பட்டு விட்டதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைமை துணை ஆணையர் மியார் ஃபாரிடாலாடிராஸ் வாஹித் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“சுயநினைவின்றி இருந்தாலும் கூட, அக்குழந்தை மீண்டும் வரும் நிலையில் உள்ளது. அவளுக்கு செயற்கை சுவாசம் நீக்கப்பட்டுவிட்டது” என்று மியார் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியில் உள்ள அக்குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்த சிறிது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதுவரை, அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களிடமும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.