Home Featured இந்தியா இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்த அபிஸ் ரிஸ்வி பாலிவுட் இயக்குநர் – தயாரிப்பாளர்!

இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்த அபிஸ் ரிஸ்வி பாலிவுட் இயக்குநர் – தயாரிப்பாளர்!

1164
0
SHARE
Ad

abis-rizvi-died-istanbul

மும்பை – இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் மரணமடைந்த இரண்டு இந்தியர்களில் ஒருவரான அபிஸ் ரிஸ்வி என்பவர் பிரபல இந்திப் படவுலக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த இந்திப் படவுலக பிரபலங்கள் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அபிஸ் ரிஸ்வியின் தந்தையார் டாக்டர் அக்தார் ஹாசான் ரிஸ்வி இந்திய நாடாளுமன்ற மேலவையின் (ராஜ்ய சபா) உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார்.

ரிஸ்வி 2014-இல் வெளிவந்த “ரோர்: டைகர்ஸ் ஆஃப் சண்டர்பான்ஸ் (Roar: Tigers of the Sundarbans) படத்தை இணைந்து தயாரித்ததோடு, அதற்கான திரைக்கதையையும் இணைந்து எழுதியிருந்தார்.